அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: டெல்லியில் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்

0 3501

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் புதிதாக இரண்டு லட்சத்து 70 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருந்து, ஆக்சிஜன் தட்டுப்பாடு எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா நிலவரம் தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தைப் பிரதமர் மோடி நடத்தி வருகிறார். இதில் மத்திய அமைச்சரவைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டின் முக்கிய மருத்துவ நிபுணர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் நிர்வாகிகளுடனும் பிரதமர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments