செய்யூர் தொகுதி விசிக வேட்பாளர் பனையூர் பாபு வாக்கு எண்ணும் மையத்தில் தர்ணா போராட்டம்

0 1552
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் விசிக வேட்பாளர் பனையுர் பாபு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் விசிக வேட்பாளர் பனையுர் பாபு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

உத்தரமேரூர் அருகே உள்ள ஏசிடி கல்லூரியில் செய்யூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூமுக்கு அருகே இன்டர்நெட் வயர் இருந்ததாகவும் அதை தான் சுட்டிக்காட்டியதும் அகற்ற மாவட்ட எஸ்பி உத்தரவிட்டதாகவும் பனையூர் பாபு கூறியுள்ளார்.

ஆனால் தற்போது ஸ்ட்ராங் ரூமுக்கு அருகே உள்ள வாக்கு எண்ணும் அறையில் இன்டர்நெட் மோடம் ஒன்று உள்ளதாகவும் இது குறித்து கேட்டால் உரிய பதில் இல்லை என்று கூறி பனையூர் பாபு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments