தல தோனிக்காக ஒரு பாட்டு... அசத்திய கோவை இளைஞர்கள்!

0 2817

கோவையை சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் பாடல் ஒன்றை இயற்றி, நடனமாடி தோனிக்கு அர்ப்பணிக்க அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். குறிப்பாக ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் தோனிக்கு உலகமெங்கும் தமிழக ரசிகர்கள் உள்ளனர். தோனி அணியும் மஞ்சள் நிற டீஷர்ட், அவரது அணியின் எண்ணான 7 அடங்கிய டீஷர்ட் சிஎஸ்கே ரசிகர்கள் விரும்பும் ஆடையாகும். தோனியின் வெறியர்கள் என்று கூறக்கூடிய அளவில் உள்ள கோவை ரசிகர்கள் தாங்களே பாடல் ஒன்றை இயற்றி அதற்கு சிஎஸ்கே டீ ஷர்ட் அணிந்த 7 பேர் நடனமாடி அசத்தியுள்ளனர்.

நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் தோனியின் தலைமையிலான சென்னை அணி வெற்றிப்பெறவும், கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை புரிந்த தோனிக்கு அர்ப்பணிக்கவும் “ மிரட்டல்” என்ற பாடலை இயக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments