இனி கொல்கத்தாவில் தேர்தல் பிரச்சாரம் செய்யப்போவது இல்லை: மம்தா பானர்ஜி

0 5361
கொரோனா சூழலில் மம்தா பானர்ஜி இனிமேல் கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழலில் மம்தா பானர்ஜி இனிமேல் கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 5 கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், ஏப்ரல் 22, 26, 29 ஆகிய நாட்களில் கடைசி மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இனிமேல் பிரச்சாரம் செய்ய மாட்டார் எனத் திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 26 அன்று கொல்கத்தாவில் பெயரளவுக்கு நடைபெறும் கூட்டத்தில் மட்டும் அவர் பங்கேற்பார் எனக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் நேரத்தையும் 30 நிமிடங்களாக மம்தா பானர்ஜி குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments