நாள்தோறும் 3லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் உற்பத்தி செய்யப்படும்: மத்திய ரசாயனத் துறை இணையமைச்சர் தகவல்

0 1063

நாடு முழுவதும் தேவை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு நாள்தோறும் 3 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக மத்திய ரசாயனத் துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  ‘நாட்டில் ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில், நாள்தோறும் ஒன்றரை லட்சம் ரெம்டெசிவிர்  மருந்து குப்பிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இன்னும் 15 நாள்களில், இது 3 லட்சமாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த மருந்தை உற்பத்தி செய்வதற்கு நாட்டிலுள்ள 20 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments