மத்தியப்பிரதேசத்தில் தோட்ட வேலை பார்ப்பவர் கொரோனா சோதனையில் ஈடுபட்டதால் அதிர்ச்சி

0 2379
மத்தியப்பிரதேசத்தில் தோட்ட வேலை பார்ப்பவர் கொரோனா சோதனையில் ஈடுபட்டதால் அதிர்ச்சி

த்தியப்பிரதேசத்தில் மருத்துவமனை ஒன்றில் தோட்ட வேலை பார்ப்பவர் கொரோனா சோதனையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாஞ்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சோதனைக்கு வந்தவர்களிடம் அங்கிருந்த ஒரு நபர் தாங்களே சுயமாக மாதிரிகளை எடுத்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

ஆனால் அவர் முழுமையான கவச ஆடை எதுவும் அணியாமல் இருந்துள்ளார்.

சோதனைக்குச் சென்றவர்கள் இது குறித்து விசாரித்த போது, அந்த நபர் அதே மருத்துவமனையில் தோட்டக்காரராக பணியாற்றும் ஹல்கே ராம் என்பது தெரியவந்தது.

மருத்துவமனையில் பணியாற்றிய அனைவருக்கும் பெருந்தொற்று ஏற்பட்டதால் பணியிலிருந்த மருத்துவர் தன்னை இதுபோல மாதிரிகளை சேகரிக்குமாறு அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்வு அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments