திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனத்திற்கு டிக்கெட் : கொரோனாவால் வராவிட்டால் அந்த டிக்கெட்டு மூலம் 90 நாட்களுக்குள் தரிசனம்

0 1820
திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனத்திற்கு டிக்கெட் : கொரோனாவால் வராவிட்டால் அந்த டிக்கெட்டு மூலம் 90 நாட்களுக்குள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனாவால் வர முடியாவிட்டால் அதே டிக்கெட்டை வைத்து 90 நாட்களுக்குள் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆன்லைனில் ஏப்ரல் 21 முதல் 30 தேதி வரை 300 ரூபாய் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களில் இருமல், சளி போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் திருமலை யாத்திரையை ஒத்தி வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments