தமிழ்நாட்டில் இன்று புதிதாக 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. 42 பேர் உயிரிழப்பு..!

0 3511

தமிழ்நாட்டில் புதிய உச்சமாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது. 

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 10,723பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 5,925 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 95 வயது சென்னை மூதாட்டி உட்பட 42 பேர் உயிரிழந்தனர்.

சென்னை பெருநகரில், மேலும் 3304 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 954 பேருக்கும், கோயம்புத்தூரில் 727 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

27 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 381 சிறுவர்-சிறுமிகள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 70 ஆயிரத்து 391 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments