புதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!

0 30987

புதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

தியேட்டர்களில் 50%க்கு மேல் ரசிகர்கள் அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

தியேட்டர்களுக்கு வருவோர் மாஸ்க் அணியாமல் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டால், தியேட்டர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை

டீக்கடைகள், ஹோட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்

டீக்கடைகள், ஹோட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

ஷாப்பிங் மால்கள், ஜவுளிக் கடைகள் உள்ளிட்டவை 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

அரசு மற்றும் தனியார் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என உத்தரவு

குடமுழுக்கு விழாக்களுக்கு கட்டுப்பாடு

ஏற்கனவே அனுமதி வாங்கியுள்ள கோவில் குடமுழுக்கு விழாக்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்

உரிய நடைமுறைகளை பின்பற்றி கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்

புதிய குடமுழுக்கு விழாக்களுக்கு அனுமதியில்லை

புதிதாக கோவில் குடமுழுக்கு விழாக்கள் நடத்துவதை கோவில் நிர்வாகத்தினர் ஒத்திவைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை

கோடைகால முகாம்களுக்குத் தடை(Summer Camp)

தமிழ்நாடு முழுவதும் கோடைகாலங்களில் நடைபெறும் சிறப்பு பயிற்சி முகாம்களுக்கு தடை விதிப்பு

சிறப்பு பயிற்சிகளுக்கான கோடைகால முகாம்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

புதிய கொரோனா மையங்களுக்கு அனுமதி

தனியார் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்து புதிய கொரோனா பாதுகாப்பு மையங்களை ஏற்படுத்த அனுமதி

கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க உத்தரவு

திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், துக்க நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமலும் மட்டுமே பங்கேற்க வேண்டும்

பொது இடங்களுக்கு வரும்போது மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டும் - மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்

பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை(Social Distancing) கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்

பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை(Social Distancing) கடைபிடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும்

தனிநபர் இடைவெளியை(Social Distancing) கடைபிடிக்காத கடைகள், வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்

தனிநபர் இடைவெளியை(Social Distancing) கடைபிடிக்காத தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments