கொரோனா பரவல் எதிரொலி - தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்

0 26024
கொரோனா ஊடரங்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கொரோனா ஊடரங்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

கொரோனா பரவல் எதிரொலி - தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்

தமிழ்நாட்டில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு

இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து அனுமதி கிடையாது

12ஆம் வகுப்புத் தேர்வுகள் தள்ளிவைப்பு

12ஆம் வகுப்புத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் தடை

தமிழ்நாட்டில் கடற்கரை உள்ளிட்ட அனைத்துவகை சுற்றுலா தலங்களுக்கும் தடை விதிப்பு

தமிழ்நாட்டில் அனைத்துவகை சுற்றுலா தலங்களுக்கும் அனைத்து நாட்களிலும் தடை விதிப்பு

உணவகங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் குறிப்பிட்ட நேரங்களில், பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி

காலையில் 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும் பார்சலுக்கு அனுமதி

மேலும், உணவகங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி

பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து இயங்க அனுமதி

தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்

புதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

தியேட்டர்களில் 50%க்கு மேல் ரசிகர்கள் அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

தியேட்டர்களுக்கு வருவோர் மாஸ்க் அணியாமல் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டால், தியேட்டர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை

டீக்கடைகள், ஹோட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்

டீக்கடைகள், ஹோட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

ஷாப்பிங் மால்கள், ஜவுளிக் கடைகள் உள்ளிட்டவை 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

அரசு மற்றும் தனியார் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என உத்தரவு

ஊடகங்களுக்கு 24X7 அனுமதி

இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தாலும், ஊடகம் மற்றும் பத்திரிக்கைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்பட அனுமதி

அத்தியாவசிய உற்பத்திகளுக்கு 24X7 அனுமதி

இரவு நேர ஊரடங்கு அமலானாலும் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி, மற்றும் விநியோகத்தில் தொடர்ந்து ஈடுபட தடையில்லை

ஞாயிறு முழு ஊரடங்கில் எதற்கு அனுமதியில்லை

ஞாயிற்றுக்கிழமைகளில் அமலாகும் முழு ஊரடங்கின்போது இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் செயல்பட அனுமதி கிடையாது

ஞாயிற்றுக்கிழமைகளில் அமலாகும் முழு ஊரடங்கின்போது, காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதியில்லை

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது, தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் உட்பட செயல்பட அனுமதிக்கப்படாது - மீறினால் கடும் நடவடிக்கை

ஞாயிறு முழு ஊரடங்கில் எதற்கு அனுமதி உண்டு?

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது, பால் விநியோகம், மருந்து கடைகள், மருத்துவமனை உள்ளிட்ட மிக அத்தியாவசிய தேவைகள் அனுமதிக்கப்படும்

குடமுழுக்கு விழாக்களுக்கு கட்டுப்பாடு

ஏற்கனவே அனுமதி வாங்கியுள்ள கோவில் குடமுழுக்கு விழாக்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்

உரிய நடைமுறைகளை பின்பற்றி கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்

புதிய குடமுழுக்கு விழாக்களுக்கு அனுமதியில்லை

புதிதாக கோவில் குடமுழுக்கு விழாக்கள் நடத்துவதை கோவில் நிர்வாகத்தினர் ஒத்திவைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை

கோடைகால முகாம்களுக்குத் தடை(Summer Camp)

தமிழ்நாடு முழுவதும் கோடைகாலங்களில் நடைபெறும் சிறப்பு பயிற்சி முகாம்களுக்கு தடை விதிப்பு

சிறப்பு பயிற்சிகளுக்கான கோடைகால முகாம்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

புதிய கொரோனா மையங்களுக்கு அனுமதி

தனியார் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்து புதிய கொரோனா பாதுகாப்பு மையங்களை ஏற்படுத்த அனுமதி

கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க உத்தரவு

திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், துக்க நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமலும் மட்டுமே பங்கேற்க வேண்டும்

பொது இடங்களுக்கு வரும்போது மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டும் - மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்

பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை(Social Distancing) கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்

பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை(Social Distancing) கடைபிடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும்

தனிநபர் இடைவெளியை(Social Distancing) கடைபிடிக்காத கடைகள், வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்

தனிநபர் இடைவெளியை(Social Distancing) கடைபிடிக்காத தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

ஆக்சிஜன் உற்பத்திக்கு உடனடி அனுமதி

தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தியை ஊக்குவிக்க உடனடியாக அனுமதி வழங்க நடவடிக்கை

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட முன்வரும் தொழிலகங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும்

image

image

imageimageimageimageimageimageimageimage

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments