பிரிட்டன் ரசாயன தாக்குதலுக்கு காரணமானவர்களே குண்டுவெடிப்புக்கும் காரணம் - குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியீடு

0 1247
பிரிட்டன் ரசாயன தாக்குதலுக்கு காரணமானவர்களே குண்டுவெடிப்புக்கும் காரணம் - குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியீடு

பிரிட்டனின் சலிஸ்பரி நகரில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் ரஷ்ய உளவாளி சர்காய் ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஸ்க்ரிபால் மீது  ரசாயன தாக்குதல் நடத்திய ரஷ்யர்களே செக் குடியரசில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு செக் குடியரசில் உள்ள வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், தொடர்பு இருப்பதாக 18 ரஷ்ய தூதர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றியது.

இந்நிலையில் வெடிகுண்டு விபத்தில் தொடர்புடைய ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டர் பெட்ரோவ் (Alexander Petrov) மற்றும் ரஸ்லான் போஷிரோவ் (Ruslan Boshirov) ஆகிய இருவரின் புகைப்படம் மற்றும் தகவல்களை செக் குடியரசு காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments