புதிதாக வாங்கிய காலணியை கடித்து சேதப்படுத்தியதால் ஆத்திரம் : வளர்ப்பு நாயை இருசக்கர வாகனத்தில் 4 கி.மீ. தூரம் தரத்தரவென இழுத்துச் சென்ற கொடூரம்

0 1233
புதிதாக வாங்கிய காலணியை கடித்து சேதப்படுத்தியதால் ஆத்திரம் : வளர்ப்பு நாயை இருசக்கர வாகனத்தில் 4 கி.மீ. தூரம் தரத்தரவென இழுத்துச் சென்ற கொடூரம்

புதிதாக வாங்கிய காலணியை கடித்து சேதப்படுத்தியற்காக வளர்ப்பு நாயை அதன் உரிமையாளர் இருசக்கர வாகனத்தில் கட்டி தரத்தரவென இழுத்து சென்ற கொடூர சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரையை சேர்ந்த சேவியர் புதிதாக காலணியை வாங்கியுள்ளார். அதனை அவரது வளர்ப்பு நாய் கடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சேவியர் தனது நண்பருடன் சேர்ந்து மொபட்டில் கயிறு மூலம் வளர்ப்பு நாயை கட்டி தரதரவென 4 கிலோ மீட்டர் தூரம் ஈவு, இரக்கமில்லாமல் இழுத்துச்சென்றார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை தட்டிக்கேட்ட நிலையில், அதற்கு சேவியர் தனது நாயை தான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என ஆணவத்துடன் கூறியுள்ளார்.

நாயை இழுத்துச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து சேவியர் மீது காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments