என்ன பன்னிவச்சுருக்கீங்க ரைசாவ.... தோல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் விபரீதம்!

0 31239

தோல் மருத்துவர் ஒருவர் செய்த தவறான சிகிச்சையால், தனது முகம் வீங்கிவிட்டதாக நடிகை ரைசா தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகார் கூறியுள்ளார்.

மாடலாக இருந்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமான ரைசா தனுசின் வேலை இல்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் கதாநாயகிகாக அறிமுகமானார். காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் போன்ற திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது வீங்கிய முகத்திற்கான காரணம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ”நான் முக சிகிச்சைக்காக பிரபல தோல் மருத்துவர் பைரவி என்பவரை சந்தித்தேன். ஆனால் அவர் எனக்கு தேவையில்லாத சிகிச்சையை வலுக்கட்டாயமாக அளித்தார். எவ்வளவோ வேண்டாம் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் தற்போது எனது முகம் இப்படி மாறியிருக்கிறது. இது தொடர்பாக அவரை நான் சந்திக்க முயன்றேன். ஆனால் அவர் என்னை பார்க்க மறுத்துவிட்டார்” . மேலும் அவரது உதவியாளர்கள் அவர், சென்னையில் இல்லை என்று கூறியதாக அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் அவர், தனது வீங்கிய முகப்படத்தையும் அந்த பதிவில் அட்டாச் செய்துள்ளார். அதில் ரைசாவின் இடது பக்க கண்ணம் வீங்கியிருக்கிறது. குறிப்பாக கண் அருகே கொப்பளம் போல் வீக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது ரைசா தனது முகவீக்கத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது தோலை மேலும் பளபளப்பாக்க மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்று, கடைசியில் ’ரைசாவின் முகத்தை ஒரு சைசாக’ மாற்றிய சம்பவம் இணையத்தித்தில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments