சிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..!

0 19233
சிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் பகுதியை சேர்ந்தவன் 19 வயதான ஜெகன். பத்தாவது படித்து விட்டு ஊரை சுற்றி வந்த ஜெகன் சிறு குழந்தை என்றும் பார்க்காமல் கொடூரத்தை அரங்கேறியுள்ளான்.

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4வயது சிறுமியை விளையாட்டு பொருட்களை காட்டி வீட்டிற்குள் அழைத்து சென்றது மட்டுமின்றி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான்.

வலித்தாங்காமல் சிறுமி அழுகவே அதனை வெளியே அனுப்பியுள்ளான். வீட்டிற்கு சென்ற சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜெகன் மீது சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் அவன் கைது செய்யப்பட்டான்.

இந்த வழக்கு மீதான விசாராணை ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.வழக்கின் மீதான விசாரணைகள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழப்பட்டது.

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக ஜெகனுக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார்.

ஜெகன் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறைதண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பு ஜெகனை கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments