பொருட்கள் வாங்குவது போல் நடித்து பேன்சி ஸ்டோரில் கைவரிசை காட்டிய பெண் - ரூ.3 லட்சம் திருட்டு

0 2774
பொருட்கள் வாங்குவது போல் நடித்து பேன்சி ஸ்டோரில் கைவரிசை காட்டிய பெண் - ரூ.3 லட்சம் திருட்டு

ரோட்டில் உள்ள பேன்சி ஸ்டோரில் பொருட்களை வாங்குவது போல் நடித்து கடையில் வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபாயை லாவகமாக திருடி சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் உள்ள கிழக்கு கொங்கலம்மன் வீதியில் வீட்டு உபயோகப்பொருட்கள், ஆடை மற்றும் அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.

அங்கு வடமாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பேன்சி ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பேன்சி ஸ்டோரில் ஆண்கள் சிலர் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் வந்துள்ளார்.

அங்கிருக்கும் பொருட்களை வாங்குவது போல் பாவனைகள் செய்த அந்த பெண் கடையில் இருந்த 3 லட்சம் ரூபாயை திருடி சென்றதாக காவல்நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்துள்ளார்.

புகாரை தொடர்ந்து பேன்சி ஸ்டோர் அமைந்திருக்கும் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், பணத்தை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் லாவகமாக திருடி சென்றது பதிவாகி இருந்தது. கடைக்கு வந்த பெண் ஒருவர் அங்கிருக்கும் பொருட்களை வாங்குவது போன்று பார்வையிட்டுக் கொண்டே, கடையின் உரிமையாளர் அருகில் இல்லாத நேரத்தில் அவர் அமரும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த கவர் ஒன்றை எடுத்து தனது கைக்குள் மறைத்துக் கொள்கிறார்.

பின்னர் அங்கிருந்து நழுவும் அந்த பெண் வேகமாக நடந்து தப்பி செல்கிறார்.

இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாக அதில் உள்ள அடையாளங்கள் அடிப்படையில் பணத்தை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments