”தென்மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு” -வானிலை ஆய்வு மையம் தகவல்

0 1678
”தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மிழகத் தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளம் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 20 முதல் 22 வரை மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பில்லிமலையில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments