ஏப்ரல் இறுதியில் நடத்தவிருந்த ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஒத்தி வைப்பு

0 4096
ஏப்ரல் இறுதியில் நடத்தவிருந்த ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஒத்தி வைப்பு

ப்ரல் இறுதியில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜேஇஇ முதன்மைத் தேர்வு கொரோனா சூழலில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேசியத் தொழில்நுட்ப நிறுவனம், ஐஐடி ஆகியவற்றில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேரவும், ஐஐடியில் சேர்வதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தகுதி பெறவும் ஜேஇஇ முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு ஏப்ரல் 27, 28, 30 ஆகிய நாட்களில் நடத்தப்படும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தேர்வுகளைத் தள்ளி வைத்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், குறைந்தது 15 நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும் என்றும் தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments