ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்து முதலமைச்சர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை ?

0 4572
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்து முதலமைச்சர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை ?

கொரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்துத்துறை முதன்மை செயலாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

அன்று மாலையே முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பசுமைவழிச்சாலையிலுள்ள முகாம் அலுவலத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

எனவே இன்று மாலை புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் இரவு நேர ஊரடங்கு தொடர்பாகவும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments