தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளாக பதவி வகிக்க 3 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை

0 3314
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளாக பதவி வகிக்க 3 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளாக பதவி வகிக்க 3 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது.

இதில் ஆர்.ராதாகிருஷ்ணன் கவுரவ செயலாளராகவும், எஸ்.சந்திரபிரகாஷ் பொருளாளராகவும், எஸ்.கதிரேசன் துணைத்தலைவராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

5 ஆண்டுகளில் நேரடியாக, தமிழ் திரைப்படங்கள் தயாரிக்காத இவர்கள் மூவரும் பதவி வகிக்க தடை விதிக்கக்கோரி திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட 3 பேர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், கவுரவச் செயலாளராக ஆர்.ராதாகிருஷ்ணனும், பொருளாளராக எஸ்.சந்திரபிரகாசும், துணைத்தலைவராக கதிரேசனும் பதவி வகிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments