பருவநிலை மாற்றத்தைத் தடுக்கப் பிற நாடுகளுடன் இணைந்து செயல்பட அமெரிக்காவும், சீனாவும் முடிவு..!

0 924
பருவநிலை மாற்றத்தைத் தடுக்கப் பிற நாடுகளுடன் இணைந்து செயல்பட அமெரிக்காவும், சீனாவும் முடிவு..!

ருவநிலை மாற்றத்தைத் தடுக்கப் பிற நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கு அமெரிக்காவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களை எரிப்பதன்மூலம் உலகின் கார்பன் மாசில் பாதியை அமெரிக்காவும், சீனாவும் வெளியிடுகின்றன. பருவநிலை மாற்றம், புவி வெப்பம் உயர்வு ஆகியவற்றுக்குக் காரணமான கார்பன் மாசு வெளியேற்றத்தை முன்னேறிய நாடுகள் குறைத்துக்கொள்ள வேண்டும் எனச் சூழலியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சாங்காயில் நடைபெற்ற கூட்டத்தில் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க ஒத்துழைக்கும் உடன்பாட்டில் அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி ஜான் கெரி, சீனப் பிரதிநிதி சி சென்குவா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments