சத்தீஸ்கரில் மின்கசிவு காரணமாக மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; ஐசியுவில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழப்பு

0 2676
சத்தீஸ்கரில் மின்கசிவு காரணமாக மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; ஐசியுவில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழப்பு

த்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழந்தனர்.

நேற்று மாலை திடீரென மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனால், ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீயை அணைத்து நோயாளிகளையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதில், 29 கொரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேரில் 4 பேர் தீ விபத்தால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments