மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அபுதாபிக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம்

0 874
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அபுதாபிக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம்

த்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மூன்று நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே சமாதானப் பேச்சில் அரபு நாடுகள் ஈடுபடுவதாக தகவல்கள் வந்த நிலையில் அபுதாபிக்கு ஜெய்சங்கர் செல்வது குறிப்பிடத்தக்கது. அங்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பையடுத்து பல்லாயிரக்கணக்கான கேரள மக்கள் அரபு நாடுகளில் இருந்து வேலைவாய்ப்பை இழந்து இந்தியா திரும்பியுள்ளனர். மீண்டும் இந்தியர்களைப் பணியமர்த்துவது தொடர்பாக இந்த சந்திப்பில் ஜெய்சங்கர் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடேயே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மெஹ்மூத் குரேஷியும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments