கொடைக்கானலில் நம்ம ராஜூ பாய்..! கெட்டப்ப மாத்தி வாக்கிங்

0 38135
கொடைக்கானலில் நம்ம ராஜூ பாய்..! கெட்டப்ப மாத்தி வாக்கிங்

கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்து களைத்து போன அமைச்சர் செல்லூர் ராஜூ குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் சென்றுள்ளார். 

எங்கும் எப்போதும் தன்னுடைய அக்மார்க் சிரிப்பால் மக்களை கவரும் அமைச்சர்களில் செல்லூர் ராஜூவுக்கு தனிச்சிறப்பு உண்டு..!

கட்சியிலோ, பொது இடத்திலோ யாரிடமும் கோபம் கொள்ளாமல் அனைவரையும் அரவணைத்து செல்லும் இன்முகம் கொண்ட செல்லூர் ராஜூ, நெட்டிசன்களால் ராஜூபாய் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். கடந்த சில வாரங்களாக கொளுத்தும் வெயிலில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்த செல்லூர் ராஜூ ஓய்வுக்காக குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்.

கொடைக்கானல் ஏரியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடை பாதையில் குடும்பத்துடன் நடைபயிற்சி மேற்கொண்டார் செல்லூர் ராஜூ, வெள்ளை வேட்டி குங்கும பொட்டு சகிதம் பார்த்து பழக்கப்பட்ட அவர், கருப்பு டிராக் ஷூட், மஞ்சள் டி சர்ட், கருப்பு கண்ணாடி, காலில் ஷூ என மாடர்ன் உடையில் கலக்கலாக வலம் வந்தார்

செல்லூர் ராஜூவை அடையாளம் கண்டு சிலர் வணக்கம் தெரிவிக்க அவரும் பதிலுக்கு வணக்கம் வைத்தவாறே நடை பயிற்சியை மேற் கொண்டார். வழியில் இருவர் அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டதால், அவர்களுடன் சிரித்த முகத்துடன் செல்போன் காமிராவில் புகைப்படம் எடுத்துக் கொண்டார் செல்லூர் ராஜூ..!

பிரச்சாரத்தால் களைத்துபோன அரசியல் விஐபிக்கள் எல்லாம் ஓய்வுக்கு ஊட்டி, கொடைக்கானல் என்று சென்று விட சம்பந்தப்பட்ட கட்சிகளின் தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கை நாளுக்காக திக் திக் மன நிலையுடன் காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments