மும்பையில் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க 70 தணிக்கையாளர்கள் நியமனம்..!

0 1068
மும்பையில் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க 70 தணிக்கையாளர்கள் நியமனம்..!

மும்பையில் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க 70 தணிக்கையாளர்களை மும்பை மாநகராட்சி நியமித்துள்ளது.

அந்த மாநகரில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து மும்பை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் 35 தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க 70 தணிக்கையாளர்களை நியமித்துள்ள மாநகராட்சி, அவர்களை வழிநடத்த 2 சிறப்பு அதிகாரிகளையும் நியமித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments