வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்ட 92வது எண் வாக்குச்சாவடி..! 548 ஆண் வாக்காளர்களில் 186 பேர் மட்டுமே வாக்களிப்பு

0 2696
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்ட 92வது எண் வாக்குச்சாவடி..! 548 ஆண் வாக்காளர்களில் 186 பேர் மட்டுமே வாக்களிப்பு

சென்னை வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92ல் மறுவாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

காலை 7 மணி தொடங்கி, மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 548 ஆண் வாக்காளர்கள் கொண்ட 92 எண் வாக்குச்சாவடியில் கடந்த 6ஆம் தேதி 220 வாக்குகள் பதிவான நிலையில், இன்று 186 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் இயந்திரமானது பாதுகாப்பாக அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments