பூமியில் நிழல் விழாத அதிசயம்..! தஞ்சையில் தோன்றிய நிழல் இல்லா நாள்

0 100889
பூமியில் நிழல் விழாத அதிசயம்..! தஞ்சையில் தோன்றிய நிழல் இல்லா நாள்

ளிமண்டலத்தில் சுட்டெரிக்கும் சூரியனை பூமி உட்பட 9 கோள்களும், அதன் துணைக்கோள்களும் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றும்பொழுது சூரியனின் ஒளி பூமி மீது படுவதால் செங்குத்தான பொருட்களின் நிழல் பூமி மீது விழும். இதில் ஆண்டிற்கு இருமுறை மட்டுமே சூரியனின் ஒளியினால் ஏற்படும் நிழல் பூமி மீது விழுவதில்லை. இந்த இரு நாட்களை தவிர பிற நாட்களில் சூரியனின் ஒளியினால் ஏற்படும் செங்குத்தான பொருட்களின் நிழல் பூமி மீது வடதிசையிலோ அல்லது தென் திசையிலோ விழுகிறது. ஆனால், சூரியனின் ஒளியினால் ஏற்படும் நிழலானது பூமியின் எந்த திசையிலும் விழாததை நிழல் இல்லா நாளாக அழைக்கப்படுகிறது. பொதுவாக நிழல் இல்லா நாளானது கடக ரேகைக்கும், மரக ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழ்கிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டின் நிழல் இல்லா நாள் ஏப்ரல் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான ஏதாவது ஒருநாளில் வரும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதன்படி ஏப்ரல் 10ம் தேதி கன்னியாகுமரியிலும், நாகர்கோவிலும், 11ம் தேதி திருவனந்தபுரம் மற்றும் திருச்செந்தூரிலும் நிழல் இல்லா நாள் வந்தது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 17ம் தேதி தஞ்சையில் செங்குத்தான பொருட்களில் நிழல் பூமியில் விழவில்லை.

தஞ்சையில் சராசரியாக நண்பகல் 12.12 மணியளவில் நிழலில்லா நாள் திகழ்ந்தது. இதனை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் ஆய்வு மூலம் உறுதிப்படுத்தினர். மேசை மீது வைக்கப்பட்ட செங்குத்தான பொருட்களின் நிழல் வட திசையிலோ அல்லது தென் திசையிலோ விழவில்லை.

சூரியனின் கதிர்கள் பூமியின் பூமத்தியரேகையின் மீது சரியாக விழுவது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் நிழலானது பொருளை விட்டு விலகிச் செல்லாமல் நேராக அதன் மீதே விழுகிறது. வழக்கமாக சூரியன் வடகிழக்கு அல்லது தென்கிழக்கில் உதிக்கும். ஆனால் இந்நாளில் சூரியன் சரியாக கிழக்கில் உதித்து மேற்கில் மறையும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments