ரெம்டெவிசீர் தடுப்பூசியின் விலை திடீரென குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

0 5005
ரெம்டெவிசீர் தடுப்பூசியின் விலை திடீரென குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

ரெம்டெவிசீர் தடுப்பூசி விலையை 2 ஆயிரம் ரூபாய் வரை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றிற்கு எதிரான இந்த தடுப்பு மருந்தை, இந்தியாவில் கேடிலா,சிப்லா,டாக்டர் ரெட்டீஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்கள் வெவ்வெறு பெயரில் தயாரித்து வருகின்றன. இந்நிலையில் ரெம்டெவிசீரின் விலையை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது.

அதன்படி டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தயாரிக்கும் ரெம்டெவிசீர் மருந்து 5400லிருந்து 2700 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 2800 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேடிலா நிறுவன மருந்தின் விலை 899 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற நிறுவனங்களின் விலையை கணிசமாக குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments