முகக்கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு ரூ.500 அபராதம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

0 2274
முகக்கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு ரூ.500 அபராதம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

யில் பயணத்தின் போதும், ரயில்வே வளாகத்திற்குள் நுழையும் போதும் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் தொடர்வதால் இந்த நடைமுறை அடுத்த ஆறு மாத காலத்திற்கு மறு உத்தரவு வரும்வரை அமலில் இருக்கும் எனக் கூறியுள்ள தெற்கு ரயில்வே, கொரோனா தடுப்பு வழிமுறைகளை ரயில் பயணிகள் கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments