ஏப்.21-ல், மேலும் 6 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன..! பிரான்சில் இருந்து கொடியசைத்து அனுப்பி வைக்கிறார் ராகேஷ் பதாரியா

0 1162
ஏப்.21-ல், மேலும் 6 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன..! பிரான்சில் இருந்து கொடியசைத்து அனுப்பி வைக்கிறார் ராகேஷ் பதாரியா

ந்தியாவிற்கு மேலும் 6 ரஃபேல் போர் விமானங்கள் வரும் 21ஆம் தேதி வழங்கப்பட உள்ள நிலையில், அந்த விமானங்களை இந்திய விமானப் படை தளபதி ராகேஷ் பதாரியா, பிரான்சில் இருந்து கொடியசைத்து அனுப்பி வைக்க உள்ளார்.

பிரான்சிடமிருந்து வாங்கப்படும் 36 ரஃபேல் போர் விமானங்களில், 14 விமானங்கள் இந்திய விமானப் படைக்கு வழங்கப்பட்டு விட்டது. மேலும் 6 விமானங்களை வரும் 28ஆம் தேதி வழங்க பிரான்ஸ் திட்டமிட்டிருந்தது.

இந்திய விமானப் படை தளபதியின் பிரான்ஸ் பயணத்தை முன்னிட்டு, தற்போது ஒரு வாரம் முன்கூட்டியே 6 விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகின்றன. வரும் 20ஆம் தேதி பிரான்ஸ் செல்லும் ராகேஷ் பதாரியா, அந்நாட்டின் தென்பகுதியில் உள்ள விமானப் படை தளத்திற்கு சென்று, 6 ரஃபேல் விமானங்களையும் வரும் 21ஆம் தேதி கொடியசைத்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்க உள்ளார்.

இதைத் தொடர்ந்து மேலும் 4 ரஃபேல் விமானங்கள் மே மாதத்தில் இந்தியாவிடம் வழங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments