வெகுஜன கலைஞனாக வாழ்ந்து மறைந்த சின்ன கலைவாணர் விவேக் விடை பெற்றார்..!

0 10343
வெகுஜன கலைஞனாக வாழ்ந்து மறைந்த சின்ன கலைவாணர் விவேக் விடை பெற்றார்..!

நடிகர் விவேக்கின் இறுதி சடங்குகள் சென்னையில் காவல்துறை மரியாதையுடன் நடைபெற்றன. அவரது உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களின் ஒருவரான விவேக், மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார்.

சுயநினைவு இன்று அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவரது இதயத்திற்கு இடபுறம் உள்ள ரத்தகுழாயில் நூறுசதவிகித அளவுக்கு அடைப்பு ஏற்பட்டதாக கூறிய மருத்துவர்கள், எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிப்பதாகவும், விவேக்கின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 4.45 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவருக்கு வயது 59.

விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

திரையுலக பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரை கலைஞர்கள், சக நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

மாலையில் அவரது உடல் விருகம்பாக்கத்தில் இருந்து மேட்டுக்குப்பம் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் சென்ற சாலையின் இருபுறத்திலும் கூடி நின்றவர்களும் விவேக்கின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

மயானத்தில் விவேக்கின் இறுதி சடங்குகள் நடைபெற்றன. அங்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது. 26 காவலர்கள் அணிவகுத்து நின்றனர் அவர்கள் 72 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments