கொரோனா தடுப்பு மருந்தைச் சந்தையில் கிடைக்கச் செய்ய வேண்டும்: பிரதமருக்கு ஒடிசா முதலமைச்சர் கோரிக்கை

0 1291
கொரோனா தடுப்பு மருந்தைச் சந்தையில் கிடைக்கச் செய்ய வேண்டும்: பிரதமருக்கு ஒடிசா முதலமைச்சர் கோரிக்கை

கொரோனா தடுப்பு மருந்தை சந்தையிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், விரும்புவோர் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் சந்தையில் கொரோனா தடுப்பு மருந்தைக் கிடைக்கச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவல் அதிகமுள்ள பெருநகரங்களுக்குத் தடுப்பு மருந்து வழங்கலில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பெரு நகரங்களில் ஊரடங்கு விதிப்பது மற்ற பகுதிகளையும் பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிற நாடுகளில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட மருந்துகளுக்கு இந்தியாவில் உடனடி ஒப்புதல் வழங்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments