கருத்து கந்தசாமி விவேக் காலமானார்... ரசிகர்கள் மரியாதை..!

0 3089

நடிகர் விவேக் மறைவுக்கு தமிழகம் முழுவதும் மாணவர்கள், கலைஞர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மதுரையில் நடிகர் விவேக் பயின்ற அமெரிக்கன் கல்லூரியில், அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் விவேக், 1978-1981 கல்வியாண்டில் இளங்கலை வணிகவியல் படிப்பை அமெரிக்கன் கல்லூரியில் முடித்தது குறிப்பிடத்தகக்து.

கோவையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் நடிகர் விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில், பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்ட  நடிகர் விவேக்கின் திரு உருவப்படத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

திருச்சியிலுள்ள நாடக நடிகர் சங்கத்தினர் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

நாமக்கல்: மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் திருவுருவப்படத்திற்கு நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மணிக்கூண்டில் நாடக நடிகர் சங்கத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

மயிலாடுதுறையில், நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு சமூக நலச் சங்கத்தினர்
மரக்கன்றுகளை நட்டு வைத்து, அஞ்சலி செலுத்தினர். இங்குள்ள லரதாச்சாரியார் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்களும்,கலந்து கொண்டனர். பூங்காவில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பேருந்து நிலையத்தை அடைந்ததும் அங்கு, வாசலில் வைக்கப்பட்டு இருந்த விவேக் உருவப்படத்திற்கு ரசிகர்களும், பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

சேலம்: நடிகர் விவேக் மறைவைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சேலத்தில் இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே மரக்கன்றுகள் நட்ட இளைஞர்கள், அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து மேலும் மாநகாட்சி முழுவதும் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வேலூரில், நடிகர் விவேக்கின் மறைவையொட்டி, இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் வீடு வீடாகச் சென்று மரக்கன்றுகளை வழங்கி அஞ்சலி செலுத்தினார்‍.தினேஷ் சரவணன் என்ற அந்த நபர் ,சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்‍.

சிவகங்கையில், நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய அவரது ரசிகர்கள், நகரின் பல்வேறு பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதுதவிர, மன்னர் மேல்நிலைப் பள்ளி, துணை மின்நிலையம், பாலர் குழந்தைகள் பாதுகாப்பு விடுதி, அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments