வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

0 1674

சென்னை வேளச்சேரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 92வது வாக்குச் சாவடியில் இன்று காலை மறு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு நடைபெற்ற நாளன்று மாலையில் மூன்று மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் இரு சக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது .

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்திருந்தார்.

மறுவாக்குப்பதிவு நடைபெறும் 92வது வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்களுக்கானது என்பதால் இங்கு வாக்களிக்கத் தகுதி பெற்ற 548 ஆண்கள் மட்டும் மறுவாக்குப்பதிவின் போது வாக்களிக்க உள்ளனர்.

இதில் வாக்காளர்களின் இடது கையின் நடுவிரலில் மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு 92வது வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments