பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று

0 1713

பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு சில நாட்களாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த அவருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில்  பவன் கல்யாணுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும்,சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ள ஜனசேனா கட்சி,அதுதொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments