வாட்ஸ் அப்பால் வம்பு... வசந்த ராஜாவும் வாசமில்லா ரோஜாவும்... அடித்து உதைத்த சப் இன்ஸ்பெக்டர்.!

0 155712

வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுக்கு இரவு வணக்கம் சொன்னதற்கெல்லாம், சந்தேகப்பட்டு கணவர் தன்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக நடிகை ராதா குற்றஞ்சாட்டியுள்ளார். உதவி ஆய்வாளர் வசந்தராஜாவால் நொந்து போன வாசமில்லா ரோஜா குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. 

சுந்தரா டிராவல்ஸ் என்ற படத்தின் மூலம் கிடைத்த புகழைவிட அவ்வபோது காவல் நிலையத்தில் அளித்த புகார்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ராதா.

ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து அவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அவரை பிரிந்த நிலையில் தனக்கு ஆதரவாக நின்ற உதவி ஆய்வாளர் வசந்த ராஜாவை 2 வதாக திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்த ராதாவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எண்ணூரில் உதவி ஆய்வாளராக உள்ள வசந்தராஜா தன்னை சந்தேகப்பட்டு அடித்து உதைப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகார் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் தனக்கு வசந்த ராஜாவால் ஏற்பட்ட கொடுமைகள் குறித்து விவரித்துள்ளார் ராதா.

வசந்தராஜாவை ரொம்ப நல்லவர் என்று நம்பி காதலித்ததாகவும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையிலும், காதல் மேல் உள்ள நம்பிக்கையில் அவரை 2 வது திருமணம் செய்து கொண்டு தனக்கு சொந்தமான 3 மாடி குடி யிருப்பில் தனி குடித்தனம் நடத்தியாக கூறும் ராதா, ஆரம்பத்தில் தன்னிடம் மிகுந்த அன்பாகவும் அக்கறையுடனும் நடந்து கொண்ட வசந்தராஜா, ஒரு பிளே பாய் என்பதை தான் கண்டுபிடித்ததும் அடிக்க ஆரம்பித்ததாக சுட்டிகாட்டுகிறார்.

தனது கணவர் வசந்தராஜாவுக்கு உதவிகள் செய்து வரும் பணக்கார இளைஞரான சதீஷ் என்பவர் மூலம், அவரது உண்மை முகம் தனக்கு தெரியவந்ததால், தன் மீது குறை கண்டுபிடிக்கும் நோக்கில் தனது செல்போனை வாங்கிப்பார்த்து சந்தேகம் கொண்டு தாக்கியதாக ராதா தெரிவித்தார்

தனது செல்போனில் உள்ள வாட்ஸ் அப் சாட்டிங்கில் யாராவது தனக்கு இரவு வணக்கம், ஹாய் என்று ஏதாவது சொல்லி இருந்தால் அந்த நபர்களுக்கு போன் செய்து உன் மனைவிக்கு ஹாய் சொல்லவா எனக்கேட்டு தனது திரையுலக நண்பர்களையும், வாய்ப்பு தரும் இயக்குனர்களையும் ஆபாசமாக பேசுவதை வசந்தராஜா வழக்கமாக்கியதாக ராதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்ட அட்வான்ஸ் பணத்தை வைத்து வாங்கிய புதிய காரை அவர் பணத்தில் வாங்கியதாக வசந்தராஜா சொல்வது பச்சை பொய் என்று சொல்லும் ராதா, மாதம் 58 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அவருக்கு கார் வாங்கும் அளவுக்கு பணம் யார் கொடுத்தது ? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவர் தற்போது வைத்திருக்கும் காருக்கு கூட 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக ராதா கூறியுள்ளார். மேலும் தனக்கும் தொழில் அதிபர்களுக்கும் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ள ராதா, திரையுலக நண்பர்கள் மீது சந்தேகம் கொண்டு 2 முறை தன்னை கணவர் சரமாரியாக தாக்கினார் என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் குடும்பத்தையும் மறந்து காதல் அதிகாரி போல செயல்பட்டதால் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளாகி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் இந்த உதவி ஆய்வாளர் வசந்த ராஜா.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments