ஜனங்களின் கலைஞனுக்கு பிரியா விடை...!

0 37155

நடிகர் விவேக்கின் இறுதி சடங்குகள் சென்னையில் காவல்துறை மரியாதையுடன் நடைபெற்றன. அவரது உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களின் ஒருவரான விவேக், மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார்.

சுயநினைவு இன்று அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவரது இதயத்திற்கு இடபுறம் உள்ள ரத்தகுழாயில் நூறுசதவிகித அளவுக்கு அடைப்பு ஏற்பட்டதாக கூறிய மருத்துவர்கள், எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிப்பதாகவும், விவேக்கின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 4.45 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவருக்கு வயது 59.

விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

திரையுலக பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரை கலைஞர்கள், சக நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

மாலையில் அவரது உடல் விருகம்பாக்கத்தில் இருந்து மேட்டுக்குப்பம் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் சென்ற சாலையின் இருபுறத்திலும் கூடி நின்றவர்களும் விவேக்கின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

மயானத்தில் விவேக்கின் இறுதி சடங்குகள் நடைபெற்றன. அங்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது. 26 காவலர்கள் அணிவகுத்து நின்றனர் அவர்கள் 72 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

image

நடிகர் விவேக் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் குவிந்தனர்

நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா, ஆடுகளம் நரேன் அஞ்சலி

விவேக் உடலுக்கு நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி அஞ்சலி

image

 

விவேக் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

விவேக் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சமூக ஆர்வலர்

விவேக் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்

கிரீன் கலாம் அமைப்பின் மூலம் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதை தீவிரமாக செயல்படுத்தி வந்தவர் 

விவேக் மறைவு, திரைப்படத் துறைக்கும், ரசிகர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் மிகப் பெரிய இழப்பு

image

 

விவேக் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சின்னக் கலைவாணர் விவேக் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது

பல்கலை வித்தகராக விளங்கியவர் விவேக் 

தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர் விவேக்

மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் விவேக் 

image

 

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சின்னக் கலைவாணர், சமூக சேவகர், தன்னுடைய நெருங்கிய, இனிய நண்பர் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சிவாஜி படப்பிடிப்பில் விவேக்குடன் நடித்த ஒவ்வொரு நாட்களும், தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் எனக் குறிப்பிட்டுள்ள ரஜினி, விவேக்கை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

image

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக் என குறிப்பிட்டுள்ளார். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

image

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments