விமானப்படைக்கு புதிய வியூகம்... டெல்லி விமானப்படை கமாண்டர்கள் மாநாட்டில் ஆலோசனை..

0 2107
விமானப்படையின் திறன்களை மேலும் அதிகரிப்பதற்கான கொள்கைகள் மற்றும் வியூகங்கள் வகுக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

விமானப்படையின் திறன்களை மேலும் அதிகரிப்பதற்கான கொள்கைகள் மற்றும் வியூகங்கள் வகுக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.   டெல்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் தளபதி பகதாரியா மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். 

கிழக்கு லடாக்கில் உள்ள சூழ்நிலை உள்பட நாடு சந்தித்து வரும் ஒட்டுமொத்த பாதுகாப்பு சவால்கள் குறித்து விமானப்படை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

எதிர்கால சவால்களை கருத்திற்கொண்டு, விமானப்படையின் திறன்களை மேலும் அதிகரிப்பதற்கான கொள்கைகள் மற்றும் வியூகங்கள் குறித்தும் மாநாட்டில் ஆலோசனை நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments