ராஜஸ்தானில் வார இறுதி நாட்களில் பொது முடக்கம் - அசோக் கெலாட் அறிவிப்பு

0 1925
ராஜஸ்தானில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 16 ஆம் தேதி, மாலை முதல் 19 ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் போடப்பட்டுள்ள இந்த முழு ஊரடங்கில் இருந்து அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments