பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவு ஏன்..? - சுகாதாரத்துறை விளக்கம்

0 4233
பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்று குறைவாக இருப்பது ஏன் என்பது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்று குறைவாக இருப்பது ஏன் என்பது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கீதாராணி,
மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவு, வசிப்பிடங்களுக்கிடையே அதிக இடைவெளி ஆகியவையும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் என்றார்.

மாவட்டத்தை சேர்ந்த பலர் சென்னை, திருப்பூர், கோவை போன்ற வெளி மாவட்டங்களுக்கு சென்றுள்ளதாகவும், அவர்கள் சொந்த ஊர் திரும்பினால் ஒருவேளை தொற்று அதிகரிக்க கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். தினமும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments