டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்கள், அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

0 2311

டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்கள், அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டம், கருமலைக்கூடல் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதை எதிர்த்து, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது மதுக்கடையின் மீது கல்வீசி தாக்கியதாக பெண்கள் உள்ளிட்ட 10 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வருமானத்தைப் பெருக்க டாஸ்மாக் கடைகளை அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்றாலும், டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு, அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமையுண்டு எனக் கூறி, பெண்கள் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments