தடையற்ற ஆக்சிஜன் விநியோகம்.! பிரதமர் மோடி அதிரடி உத்தரவு.!

0 3196
நாட்டில், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு, அதிகாரிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு, அதிகாரிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா 2ஆவது அலையில் சிக்கித் தவிக்கும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், உத்திரப்பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியான, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை, இயல்பை விட, பன்மடங்காக அதிகரித்துள்ளது. சில இடங்களில் பற்றாக்குறையாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவைத் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக, சுகாதாரத்துறை, வர்த்தக தொழில்துறை, ஸ்டீல் துறை, சாலைப் போக்குவரத்துத்துறை ஆகியவற்றின் அமைச்சர்களிடமும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, மாநிலங்களுடன் இணைந்து, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் அறிவுறுத்தியதாக, அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

உருக்கு இரும்பு ஆலைகளுக்கு நடைபெறும் தடையற்ற ஆக்சிஜன் விநியோகத்தை, மருத்துவத் தேவைக்கு உடனடியாக திருப்பி விடுமாறு, பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும், எவ்வித முன் அனுமதியும் இன்றி, ஆக்சிஜன் டேங்கர் லாரிகளின் தடையற்ற இயக்கத்தை, உறுதி செய்யுமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். நைட்ரஜன் மற்றும் ஆர்கான் வாயு டேங்கர் லாரிகளில், ஆக்சிஜன் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் ஆணையிட்டுள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், அவற்றை நிரப்பும் மையங்கள், அதனை கொண்டு செல்லும் டேங்கர் லாரிகள், ஆக்சிஜன் சிலிண்டர் பாட்டிலிங் யூனிட்டுகள் 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு பிரதமர் ஆணையிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments