உத்தரப் பிரதேசத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் 10,000 ரூபாய் வரை அபராதம்..!

0 1972

உத்தரப் பிரதேசத்தில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாதோருக்கு முதன்முறை ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறை பத்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கும் வகையில் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் வியாழனன்று புதிதாக 22 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளையும் கடுமையாக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒருவர் மாஸ்க் அணியாமல் இரண்டாவது முறை பிடிபட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments