சென்னை எம்.ஐ.டி மேம்பாலத்தின் மீதிருந்து சாலையில் குதித்த இளைஞர்..

0 37915
சென்னை குரோம்பேட்டையில் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்ய எண்ணி, எம்.ஐ.டி பாலத்தின் மீதிருந்து குதித்த இளைஞர் சாலையில் சென்ற கார் மீது விழுந்து படுகாயமடைந்தார்.

சென்னை குரோம்பேட்டையில் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்ய எண்ணி, எம்.ஐ.டி பாலத்தின் மீதிருந்து குதித்த இளைஞர் சாலையில் சென்ற கார் மீது விழுந்து படுகாயமடைந்தார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்ற அந்த நபர், அமைந்தகரையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இரு தினங்களுக்கு முன் ஊருக்குச் செல்வதாக விடுமுறை சொல்லிவிட்டுக் புறப்பட்டவர், தாம்பரம் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

இன்று மதியம் எம்.ஐ.டி பாலத்தின் மீது நடந்து வந்துகொண்டிருந்தவர் திடீரென அங்கிருந்து சாலையில் குதித்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த இன்னோவா கார் மீது விழுந்தவர் படுகாயமடைந்தார்.

முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சனை காரணமாகவே மாரிமுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments