அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ள தேர்வு முடிவுகளை வெளியிட வைகோ கோரிக்கை

0 1090
அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகளைக் கால தாமதம் இன்றி வெளியிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகளைக் கால தாமதம் இன்றி வெளியிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு இலட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வு எழுதியதில், முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி இலட்சத்துக்கு மேற்பட்டோரின் முடிவுகளை நிறுத்தி வைத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கல்லூரிக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காகச் சில மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நிறுத்தி வைத்துள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகளைத் தாமதமின்றி வெளியிட  வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments