இந்தியா - பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்பட நடுவராகச் செயல்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தகவல்

0 1523
இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை தாண்டிய அத்துமீறலை நிறுத்தும் உடன்பாடு ஏற்பட நடுவராகச் செயல்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை தாண்டிய அத்துமீறலை நிறுத்தும் உடன்பாடு ஏற்பட நடுவராகச் செயல்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கான ஐக்கிய அமீரகத் தூதர் யூசப் அல் ஒடைபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், கடந்த பிப்ரவரியில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்படுவதற்கு ஐக்கிய அமீரகம் உதவியதாகத் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை என இந்தியா தொடர்ந்து கூறி வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

அதேநேரத்தில் காஷ்மீரில் பதற்றத்தைத் தணிப்பது தொடர்பாக ஜனவரி மாதத்தில் துபாயில் இந்திய - பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments