நாடு முழுவதும் இரண்டாவது நாளாக 2 லட்சத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு

0 1733

நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது. பெருந்தொற்றுக்கு ஒரு நாள் பலி எண்ணிக்கையும் ஆயிரத்து 185 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மேலும் ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில், பெருந்தொற்றுக்கு ஆயிரத்து 185 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை ஒட்டுமொத்தமாக நாட்டில் 1 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 1 கோடியே 25 லட்சத்து 47 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பரவத் தொடங்கிய நாளில் இருந்து நேற்று வரை கணக்கிட்டால், பெருந்தொற்றுக்கு இதுவரை 1,74,308 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 11 கோடியே 72 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments