தெலங்கானாவில் 6 மாத குழந்தை நரபலி!

0 3537
நரபலி கொடுக்கப்பட்ட குழந்தையுடன் புஜ்ஜி

சமீப காலமாக ஆந்திராவில் நரபலி கொடுக்கும் சம்பவங்கள், மாந்தரீகங்களை வைத்து அரங்கேறும் கொடூர சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்சக்கட்டமாக 6 மாத குழந்தையை பெற்ற தாயே நரபலி கொடுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஆந்திராவில் பெற்ற இரு மகள்களை தாயார் அடித்து கொலை செய்து நரபலி கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்ததாக, புதையல் இருப்பதாக மாந்தரீகர் கூற பழமை வாய்ந்த சிவன் கோவிலின் நந்தியை உடைத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாகப்பட்டினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சேர்ந்த 6 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், 6 மாத அழகு குழந்தையை நாகதோசம் நீங்க பெற்ற தாயே நரபலி கொடுத்துள்ளார். 

தெலங்கானா மாநிலம் சூரியா பேட்டையை சேர்ந்த  புஜ்ஜி என்ற பெண்ணுக்கு பிறந்து 6 மாதமேயான பெண் குழந்தை உண்டு. கிருஷ்ணாவின் 2வது மனைவியான புஜ்ஜி கடந்த 6 மாத காலமாக தனியாக வசித்து வருகிறார். இதற்கிடையே, ஜோசியர் ஒருவருக்கு புஜ்ஜிக்கு நாகதோசம் இருப்பதாக கூறியுள்ளா.  தோசத்தை தீர்ப்பதற்கான நடவடிக்கையில் 6 மாத காலமாக புஜ்ஜி இரவு நேரத்தில் பூஜை செய்து வந்துள்ளார் புஜ்ஜி. பூஜையின் நிறைவான  சிவன் படத்தின் முன்க குழந்தையை நேற்றிரவு நரபலி கொடுத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் புஜ்ஜி கதவை  திறக்கவில்லை. பின்னர், கதவை உடைத்து பார்த்த போது,  குழந்தை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றது தெரியவந்தது. உடனடியாக. பொது மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூஜ்ஜியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments