தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசித் திருவிழாவின் கடைசி நாள்

0 2163
தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசித் திருவிழாவின் கடைசி நாள்

கொரோனா தடுப்பூசி திருவிழாவின் இறுதி நாளான இன்று 45 வயதிற்கு மேற்பட்டோர், காலை முதலே ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கடந்த 14 ஆம் தேதி ஒன்றரை லட்சம் பேருக்கும், நேற்று 2 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் தடுப்பூசி திருவிழா நிறைவு பெறவுள்ள நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலை 9 மணி முதல் 200 க்கும் மேற்பட்டார் வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments