12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு துவங்கியது

0 2013

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று முதல் வரும் 23-ந்தேதி வரை 28 பாடப்பிரிவுகளுக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறுகின்றன. மாணவர்கள் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே ஆய்வகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆய்வகங்கள், ஆய்வக பொருட்களை அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தம் செய்யவும், கிருமி நாசினி பயன்படுத்தியவுடனேயே எளிதில் தீப்பற்றக் கூறிய பொருட்களை மாணவர்கள் தொடக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதிக்குள் அனைத்து செய்முறை தேர்வுகளையும் நடத்தி முடித்து, 24-ம் தேதிக்குள் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments