மேற்கு வங்கத்தில் எஞ்சிய தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தும் திட்டமில்லை - தேர்தல் ஆணையம்

0 1082
மேற்கு வங்கத்தில் எஞ்சிய தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தும் திட்டமில்லை - தேர்தல் ஆணையம்

மேற்கு வங்கத்தில் கொரோனா பரவலையடுத்து எஞ்சியுள்ள நான்கு கட்ட சட்டமன்றத் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

ஆயினும் அத்தகைய திட்டம் ஏதுமில்லை என்று தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.மேற்கு வங்கத் தேர்தலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக்  கூட்டத்தை இன்று தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது.

ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒரு பிரதிநிதியை மட்டும் அனுப்புமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டம் சேர்ப்பதால் கொரோனா பரவுகிறது என்ற புகாரையடுத்து அனைத்து தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மமதா பானர்ஜி வலியுறுத்தியிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments